புதுக்கோட்டை அருகே சிக்கிய கள்ள நோட்டுக் கும்பலில் எம்.பி.ஏ.பட்டதாரி- பரபரப்பு தகவல்கள்

தமிழகம் முழுதும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்று  புதுக்கோட்டை அருகே கைதான கும்பலில் ஒருவரான எம்.பி.ஏ.பட்டதாரி குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, மூங்கித்தான் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில், 200 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து, மது வாங்க முயன்ற, சந்தோஷ்குமார் என்பவரை, கடந்த, 16ல் போலீசார் கைது செய்தனர்.அவரது தகவலின் படி, திருமயத்தைச் சேர்ந்த மூவர், சென்னையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரியைச் சேர்ந்த மணிகண்டன், 31, ஆகியோரை கைது செய்தனர்.எம்.பி.ஏ., பட்டதாரியான மணிகண்டன் வீட்டில் இருந்து, 2,000 முதல், 10 ரூபாய் வரை, 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், லேப்டாப், நகல் எடுக்கும் இயந்திரம், பிரின்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் பொருட்காட்சி ஏஜன்டாக பணியாற்றிய மணிகண்டன், ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு திரும்பினார். நகல் எடுக்கும் இயந்திரம் வாங்கி, கள்ள நோட்டுகளை அச்சிட்டு, மாநிலம் முழுதும் புழக்கத்தில் விட்டுஉள்ளார்.குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதை குறி வைத்து செயல்பட்டுள்ளார். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 + = 70