டாஸ்மாக் மதுக் கடைகளில் விலைப் பட்டியல் : கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க, கடைகளில், ‘குடி’மகன்களுக்கு தெரியும் வகையில், மது வகைகளின் விலை பட்டியலை வைப்பதுடன், ஆய்வு மேற்கொள்ளும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தர விட்டு உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் மது கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பதால், ‘குடி’மகன்கள் பாதிகக்கப்படுகின்றனர்.இதை தடுக்க, கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது, அபராதம் வசூல், பணி விடுவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இந்நிலையில், ஊரடங்கால் மூடப்பட்ட மது கடைகள், இம்மாதம், 16ம் தேதி முதல், மீண்டும் திறக்கப்பட்டன. பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையிலும், ‘குடி’மகன்கள், மது வகைகளை வாங்குகின்றனர்.

இக்கட்டான சூழலிலும், மது கடை ஊழியர்கள், பாட்டிலுக்கு, 30 ரூபாய் வரை, கூடுதலாக வசூலிப்பதால், ‘குடி’மகன்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வரி வருவாய் குறையும் சூழல் உருவாகிஉள்ளது.இதனால், கடைகளில், மது வாங்குவோருக்கு தெரியும் வகையில், விலை பட்டியல் வைப்பதுடன், தீவிர ஆய்வு செய்து, கூடுதல் விலை வசூலிக்கும் ஊழியர்களிடம், அபராதம் வசூல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்குமாறு, மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − 44 =