சேலம் அருகே வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் அராஜகம் – பெண்கள் மறியல்

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரம் பகுதியில் விவசாயிகளின் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு, கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பெண்களைை அதிகாரிகள் மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். மேலும் நேற்று விவசாயிகளின் பட்டா நிலத்தை ஜேசிபி மூலம் அதிகாரிகள் நிரவி சீர்செய்ய வந்ததால் அங்கிருந்த விவசாயப் பெண்கள் ஜேசிபி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:- நாங்கள் நீண்ட நாட்களாக எங்கள் சொந்த பட்டா நிலத்தில் வசித்து, விவசாயம் செய்து வருகிறோம். சிலர் வசதிக்காக எங்கள் சொந்த விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு நீண்ட நாட்களாக மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்றும் அதிமுக பிரமுகர்கள் தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் எங்கள் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஜேசிபி மூலம் நிரவி சீர்செய்ய வந்ததால் மறியலில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிமுக பிரமுகர்கள் தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக கடும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுகுறித்து முறையாக விசாரித்து எங்கள் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 23 = 31