வேலூர் வாணி­யம்­பாடி பகுதியில் ரூ.25 லட்­சம் ரொக்கப்­ பணம், கஞ்­சா­வு­டன் 7 பேர்கொண்ட கும்­பல் போலீசாரால் கைது

வாணி­யம்­பாடி பகு­தி­யில் ரூ.25 லட்­சம் ரொக்­கப்­ பணம், கஞ்­சா­வு­டன் 7 பேர்கொண்ட கும்­பலை போலீ­சார் கைது செய்­த­னர்.

இதில் நடந்த தள்ளுமுள்­ளு­வில் பெண் காவ­ல­ருக்கு கைமுறிவு ஏற்­பட்­டது. வாணி­யம்­பாடி நேதாஜி நகர் பகு­தி­யில் கள்­ளச்­சாரா­யம், கஞ்சா மற்­றும் போலிமது பாட்­டில்­கள் அதி­கள வில் விற்­கப்­ப­டு­வ­தாக திருப்பத்தூர் எஸ்.பி. விஜ­ய­கு­மா­ருக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. தனிப்­படை இதனை­ய­டுத்து அவ­ரது உத்­த­ர­வின் பேரில் கிரா­மிய காவல் ஆய்­வாளர் கவி­தாவின் தலைமை­யில் 10 பேர் கொண்ட தனிப்­படை­போ­லீ­சார் தீவிர வேட்டையில் இறங்­கி­னர்.

வாணி­யம்­பாடி நேதாஜி நகர் பகு­தி­யைச் சேர்ந்த மகேஷ்­வரி என்­ப­வர் பிரபல கள்­ளச்­சாராய வியா­பாரி ஆவார். இவர் மீது பல்­வேறு வழக்­கு­கள் உள்ள நிலை­யில் இவர் அடிக்கடி குண்­டர் சட்­டத்­தில் கைதாகி வெளியே வந்துள்ளார். இந்­நி­லை­யில் அவர் ஆம்­பூர் அடுத்த பச்­சக்­குப்பம் பகுதியில் தலை­ம­றைவாகி அங்கு கஞ்சா, கள்­ளச்சாராய விற்­பனை­யில் ஈடு­பட்டு வருவ­தாக தனிப்படை போலீ­சா­ருக்கு தக­வல் தெரி­ய­வந்­தது.

இதனை­ய­டுத்து பச்­சக்குப்­பம் பகு­திக்கு சென்ற போலீ­சார் மகேஷ்­வரி தங்கியி­ருந்த வீட்டை சுற்றிவளைத்­த­னர். அப்போது போலீ­சா­ரைக் கண்டவுடன் அதிர்ச்­சி­ய­டைந்த மகேஷ்வரி அவர்­க­ளு­டன் தகரா­றில் ஈடுபட்டார்.

அப்போது திடீ­ரென்று அரி­வாளை எடுத்து போலீ­சாரை அவர் தாக்க முயன்றார். தடுக்க முயன்­ற­போது பெண்காவ­லர் ஒரு­வர் கீழே தள்ளப்பட்டார். இதில் அவ­ருக்கு கை முறிவு ஏற்­பட்­டது. இதனை­ய­டுத்து அங்­கி­ருந்து மகேஷ்­வரி தப்பிஓட முயன்­றார். ஆனால் போலீ­சார் அவரை மடக்கி பிடித்­த­னர். அவ­ரு­டன் உஷா, காவியா, தேவேந்­தி­ரன் மற்­றும் 3 சிறுவர்­க­ளும் கஞ்சா விற்­பனையில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். 7 பேரை­யும் போலீசார் கைது செய்­த­னர். இந்த கும்­ப­லி­டம் இருந்து மொத்­தம் ரூ.25லட்சம் ரொக்­கப்­ப­ணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இது போக ரூ.5 லட்­சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாபொட்­ட­லங்­கள் 3 இரு­சக்­கர வாக­னங்­க­ளும் பறிமு­தல் செய்­யப்­பட்­டன. வலி­யில் துடித்த பெண் காவ­லரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்­த­னர். இந்த சம்­ப­வம் வாணி­யம்­பாடி மற்றும் ஆம்பூர் பகு­தி­க­ளில் பெரும் பரபரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − 80 =