தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவலை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்றுபுதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆகஅதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 6 =