உலக அளவில் 50 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் கையாளுகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால்,  சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலமே, கொரோனா நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று  மருத்துவ  நிபுணர்கள்  கூறி வருகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கணிசமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும்,  அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில்  கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலும்  கொரோனா பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.  இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,970,918-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  325,151 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − = 5