‘வரலாறு.காம்’ தொடங்கப்பட்ட 7 மாதங்களிலேயே 10 லட்சம் வாசகர்களை கடந்து சாதனை..!

வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்..!

நமது ‘வரலாறு.காம்’ (www.varalaruu.com) இணையதளம் தொடங்கப்பட்ட 7 மாதங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

செய்தி உலகம் நாளுக்கு நாள் பல்வேறு ஊடக வடிவ நிலையை பெற்று வருகிறது. அச்சிதழ்களுக்கு இணையாக தற்போது மின் ஊடகங்களும் வெகுவாக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முதல் உள்ளூர்வரை நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும், எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையுடன் உடனுக்குடன் பதிவேற்றி வாசகர்களிடம் செய்திகளை கொண்டு போய்ச் சேர்ப்பதில் ‘வரலாறு.காம்’ தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. 

புதுக்கோட்டை மற்றும் சென்னையில் இருந்து வெளிவரும் ‘புதுகை வரலாறு’ நாளிதழின் சார்பில் ‘வரலாறு.காம்’ இணையதளம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

தேசிய மற்றும் மாநிலச் செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் சிற்றூர்களில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல், ஆன்மீகம், சமூகம்,கல்வி, வர்த்தகம், விவசாயம்,விளையாட்டு,பண்பாட்டு நிகழ்வுகளைக்கூட தவறவிடாமல் ‘வரலாறு.காம்’ செய்தியாளர்களின் பங்களிப்பால் உடனுக்குடன் பதிவேற்றி வருகிறது..

மாநில அளவிலான அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ‘வரலாறு.காம்’ தளத்தினை தொடர்ந்து வாசித்து வருகின்றனர்.

‘வரலாறு.காம்’- இணையதளத்தில் பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இச்செய்திகளின்  எதிரொலியாக பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு அதிகாரிகளால் உடனடியாக தீர்வு காணப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அனைத்து சமூக நல அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சிகள் இப்படி அனைத்து தரப்பினரின் செய்திகளுக்கு களமாகவும், தளமாகவும் ‘வரலாறு.காம்’ தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

‘வரலாறு.காம்’ தற்போது ஏழு மாதங்களை கடந்துள்ள நிலையில், அதன் வாசகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

7 மாத காலத்தில் 10 லட்சம் வாசகர்களை பெற்றிருப்பது என்பது மின் இதழியல் உலகத்தில் மிகப்பெரும் சாதனை ஆகும். ‘வரலாறு.காம்’-இன் இந்த சிறப்புச் சாதனைக்கு தொடர்ந்து துணை நிற்கும் அனைத்து தரப்பிலான வாசகர்கள், ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள்,முகவர்கள், செய்தியாளர்கள் என எங்களின் வெற்றிப் பயணத்துக்கு துணை நிற்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் ‘வரலாறு.காம்’ தனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

எங்களின் வெற்றிப் பயணத்துக்கு உங்களின் நல்லாதரவை தொடர்ந்து வேண்டுகிறோம்.புதுப்பாய்ச்சலுடன்,துல்லியச் செய்திகளுடன் ‘வரலாறு.காம்’ இன்னும் வரலாற்றுச் சாதனை படைக்க உங்கள் ஆதரவை வணங்கி வரவேற்கிறோம்..!                        

நிர்வாகி  , வரலாறு.காம்   www.varalaruu.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 + = 46