ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு நேரடிப் பயன் எவ்வளவு? – கமல் கேள்வி

சென்னை, மே-18 ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடிப் பயன் எவ்வளவு என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தப் பொருளாதார இழப்பை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

சில நாட்களுக்கு முன்பு பொருளாதார இழப்பைச் சரிசெய்ய ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்கள் அறிவித்து வந்தார்.

இந்தத் திட்டங்களைப் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடிப் பயன் எவ்வளவு?. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு”. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − 93 =