புதுக்கோட்டை வட்டாரத்தில் செங்கல் சூளைகள் செயல்பட அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் : உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளில் உள்ள மேட்டுப்பட்டி, சேங்கை தோப்பு, மேலக்கொள்ளை, கைக்குறிச்சி, சூலைப்பட்டி கேப்பரை, பொன்னம்பட்டி, திருக்கட்டளை, வேப்பங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்  கடந்த பல ஆண்டுகளாக  பொருளாதார முடக்கம், மண் தட்டுப்பாடு,ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் செங்கல் கால்வாய்கள் நடத்த முடியாமல் விட்டுவிட்டனர்.

செயல்படும் ஒரு சில சூளைகளும் தற்போது உலகை உலுக்கி வரும்  வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளது.  

தற்போது தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம் என்ற அரசு அறிவிப்பு மூலம் ஒருசில செங்கல் சூளைகள் செயல்படுத்துவதற்கு ஆயத்தமாகி உள்ளது.

இந்த நிலையை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள செங்கல் தொழிலாளர்கள் மற்றும்  தொழில் நடத்துபவர்களுக்கு  அரசு நிவாரணம் மற்றும் வங்கிகளின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்குமாறு இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரிய அளவில் நிலவி வரும் மண் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை அரசு துரித நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 + = 42