நிர்மலா சீதாராமன் இன்று மாலை 3 ஆம் கட்ட அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு மேலும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களில் விவசாயத்துறை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்களை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

32 + = 36