தேவகோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள்

தேவகோட்டை பகுதியில் முத்துராமலிங்கம் அம்பலம் நினைவு அறக்கட்டளை சார்பில் டாக்டர் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் உள்ள அனைவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா மற்றும் அதனை சுற்றி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முத்துராமலிங்கம் அம்பலம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் ராஜ்குமார் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

 144 தடை உத்தரவு காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரம் இன்றி இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களில் மிகவும் சிரமப்படும் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை பயனாளிகளுக்கு  அறக்கட்டளை  சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சரவணகுமார் ,தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நல சங்க தலைவர் தங்கம், சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளி சங்க தலைவர் கண்ணன் ,மாவட்ட மாற்றுத்திறனாளி செயலாளர் பாபு, தேவகோட்டை  வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − 60 =