தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் : நிர்மலா சீதாராமன்

தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அவர் கூறியபடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் அந்த திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை உள்ளிட்ட திட்டங்களை நேற்று முன்தினம் அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் 2-வது கட்டமாக வெளிமாநில தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான சலுகை திட்டங்களை நேற்று அவர் அறிவித்தார். இனி வரும் நாட்களில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

3-வது நாளாக இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். மேலும், 11 திட்டங்களில்  8 திட்டங்கள் விவசாயத்துறை உட்கட்டமைப்புக்காக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − = 54