முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2 முறை நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டித்தும், கட்டுப்பாடுகளை அறிவித்தும் அரசு உத்தரவுகளை பிறப்பித்தது.

தற்போது 17-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்குப்பிறகு, அரசுக்கு அளித்த பரிந்துரைகள் பற்றி மருத்துவ நிபுணர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 66 = 76