ஐ.பி.எல் ரத்து செய்யப்பட்டால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் : பிசிசிஐ

கொரோனா காரணமாக ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுமென பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்கி மே 24 வரை நடக்கவிருந்தது.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்.15 வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவே, காலவரையின்றி ஐ.பி.எல் தொடரை ஒத்திவைப்பது பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், கிரிக் பஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியிருப்பதாவது:

தற்போது ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. இருதரப்பு தொடர்களை நடத்துவதே கிரிக்கெட் வாரியங்களுக்கு வருவாயை ஈட்டி தரும். ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் பிழைத்தால் தான் ஐ.சி.சி பிழைக்க முடியும். வருவாய் இழப்புகளை ஈடுகட்ட பிசிசிஐ பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும். ஆனால் எந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை. அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கவும், நிதி இழப்பை ஈடுகட்டவும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இது குறித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி துவங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் துவங்குமென நம்புகிறோம். ஊரடங்கு இருப்பதால் மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தொடர் மிக முக்கியமானது. நாங்கள் அதை இழக்க விரும்பவில்லை. பெண்களின் கிரிக்கெட் போட்டிகளை விட ஆண்களின் கிரிக்கெட்டுக்கு பி.சி.சி.ஐ முன்னுரிமை அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 78