கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மொபைல் ஏடிஎம்கள்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக உள்ள ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி அலுவலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருகிறது, இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் வெறும் 0.9% என உள்ளது. தமிழக மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது, கொரோனா தடுப்பு களப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன எனவும் கூறினார்.

மேலும், நல்ல செய்தி மக்களை தேடி மிக விரைவில் வரும் எனவே தேவையற்ற அச்சம் வேண்டாம், சென்னையில் 7 மண்டலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை பார்க்க உறவினர்கள் செல்ல வேண்டாம். மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோர் நலமாக உள்ளனர். முதியோர், நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. முதியோர், சர்கக்கரை நோயாளிகளை தனிக்கவனம் செலுத்தி பாதுகாத்து வருகிறோம் எனவும் கூறினார்.

மக்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனே வரவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருந்து, மாத்திரைகள் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.* மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மொபைல் ஏடிஎம்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. சென்னையில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வேறு இடங்களில் தங்க வைக்கப்படுகின்றன எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 + = 52