ஊத்தங்கரை துப்பரவு பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து உள்ள சிங்காரபேட்டை, நடுப்பட்டி, கல்லாவி, மேட்டுத்தாங்கள் மற்றும் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணிபுரியிம் துப்பரவு பணியாளர்கள் 350க்கும்
மேற்பட்டோர்க்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் வழங்கினார்.

மேலும் தீர்த்தகிரி வலசை, கல்லாவி, பனைமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள இருளர் இனத்தை சார்ந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, ஊராட்சி மன்ற தலைவர் அகமது பாஷா, பட்டாபி, விஜிகுமார், ரவி, அயோத்தி அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 + = 72