சிங்கம்புணரி அருகே தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 4 டன் காய்கறிகள் நிவாரணமாக வழங்கல்

சிங்கம்புணரி அருகே தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 4 டன் காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ். புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சிப் பகுதியில் கொரொனா  எதிரொலியினால் வாழ்வாதாரமின்றி தவிக்கும்  ஊராட்சி பகுதி மக்களுக்கு 4 டன் காய்கறிகள் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டது.

பொன்னமராவதி வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் சார்பில் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கார்டுகள் பெற்றுள்ள 800 பயனாளிகளுக்கு சுமார் 4 டன் காய்கறிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்  வாராப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். நிவாரணப் பொருட்களை உலகம்பட்டி காவல்துறை ஆய்வாளர் செல்வகுமாரி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். காய்கறி தொகுப்புகளை பொன்னமராவதி அரிமா சங்கத்  தலைவர் பெரியசாமி, அரிமா அறக்கட்டளை செயலாளர் பழனியப்பன், வாராப்பூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், பொறியாளர் ராமநாதன் ஆகியோர் வழங்கினர். 

நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு சுப்பையா, சின்னையா, பொன்னையா, சக்தி, சிவசுப்பிரமணியன், பழனிச்சாமி, அழகர்சாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =