சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், டி-20 எனப்படும் 20ஓவர் போட்டிகளின் தரவரிசைகள் இடம்பெற்றுள்ளது. அந்த பட்டியலில் முதல்முறையாக இந்தியாவை பின்னுக்கு தள்ளி 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 268 புள்ளிகளுடன் நியூஸிலாந்து 2வது இடத்திலும், 266ஆவது புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மேலும், 260 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தில் உள்ளது. 2016 க்குப் பின் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. பெரும்பாலும் 2016-17ல் நடைபெற்ற 13 போட்டிகளில் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.