பாலிவுட்டில் மீண்டும் ஒரு சோகம் : பழம்பெரு நடிகர் ரிஷிகபூர் காலமானார்

உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் காலமானார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர்  புற்று நோயால் பாதிக்கப்பட்டு  உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள  எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு புற்றுநோய் இருந்து வந்தது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் ரிஷிகபூர்  சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாலிவுட்டின்  புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 67 வயது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.

நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அவர் உயிர் பிரியும்போது மனைவியும் நடிகருமான நீது கபூர் அவரது பக்கத்திலேயே இருந்தார், என சகோதரர் ரந்தீர் கபூர் உறுதிப்படுத்தினார்.ரிஷி மருத்துவமனையில் காலமானார்  பற்றிய செய்தியை மூத்த நடிகரும் சக நடிகருமான அமிதாப் பச்சன் டுவீட் செய்துள்ளார்.

ரிஷிகபூர் மறைவுக்கு  தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.ராகுல்காந்தி வெளியிட்டு உள்ள இரங்கலில் இந்திய சினிமாவுக்கு இது ஒரு பயங்கரமான வாரம், மற்றொரு பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் காலமானார். ஒரு அற்புதமான நடிகர், தலைமுறைகளாக பெரும் ரசிகர்களை கொண்டவர். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கல் என கூறி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் பாலிவுட் நட்சத்திரம் இர்பான்கான் உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து பாலிவுட் திரை உலகம் மீள்வதற்குள் ரிஷிகபூர் மரணம் இன்னொரு பேரிழப்பு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − = 62