பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மும்பையில் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

இந்தியாவின் பிரபல நடிகர் இர்பான் கான், ஜுராசிக் வேர்ல்ட், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற பல்வேறு பிரபல படங்களிலும் நடித்து உலகப் புகழ் பெற்றவர்.இவருக்கு மனைவி சுதாபா சிக்தர், மகன்கள் பாபில், அயன் உள்ளனர். ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர், 2011-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், நியூரோ எண்டாக்ரின் டியூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தர்.

2வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தும், டுவிட்டரில் ஹாஷ்டாக் மூலமும் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4