திருப்பத்தூர் அருகே ஆதரவற்றவர்களுக்கு பாமக சார்பாக உணவு வழங்கும் விழா…

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உதவும் வகையில் கடந்த 20 நாட்களாக உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர்.

அதன்பின் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுக்கு உணவு மற்றும் முக கவசம், கை உரை, கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

உணவு வழங்கும் குழுவில் மாவட்ட துணை செயலாளர் ஆதிமூலம், ஒன்றிய தலைவர் மாது, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் காந்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய உணவுக்கான நிதி உதவியை வெக்காளியம்மன் ஆலய நிர்வாக இயக்குனர் சரவணன் சாமிகள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 10 = 14