கொரோனாவை தடுக்க குடைப்பிடியுங்கள்: கேரளஅரசு புதுமுயற்சி!!

இந்தியாவில் முதலில் கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காட்டுத்தீ போல் தொற்று பரவினாலும், தற்பொது கொரோனாவை கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு முன்னோடியாக கேரளா இருந்து வருகிறது. கேரளாவில் 458 பேர் பாதிக்கப்பட்டும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கேரளஅரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொரோனாவை தடுத்து நல்ல பலனை அளித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றை தடுக்க கேரளாவின், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் எங்கு சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. குடைபிடித்து செல்வதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவது தவிர்க்கப்பட்டு குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளி பேணப்படும் என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். இதற்காக மலிவு விலையில் குடைகள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.