கொரோனா தடுப்பு: தள்ளிப்போன ஐ.பி.எல், கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.3,700 கோடி இழப்பு!!

கொரோனா காரணமாக மார்ச் மாதம் 29 நடக்கவிருந்த 13-வது ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தேதி அறிவிக்காமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் அப்போது, ஐ.பி.எல் போட்டிகள் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐ.பி.எல். போட்டி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.3,700 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒளிபரப்பு உரிமை மற்றும் விளம்பர வருவாய் என ரூ.3269 கோடி, ஸ்பான்சர் மூலம் கிடைக்கும் ரூ.400 கோடி, வீரர்களின் தலைகவச விளம்பரம் ரூ.1 கோடி, உடை விளம்பரம் செய்ய ரூ.7.4 கோடியை, கிரிக்கெட் வாரியம் இழக்கும். போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கு ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 + = 30