தரங்கம்பாடியில் 6,200 குடும்பங்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் நிவாரண உதவி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை பூம்புகார் எம். எல். ஏ. பவுன்ராஜ் வழங்கினார்.

தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பொறையார் பகுதிகளில் கொரோனா கிருமி தொற்று காரணமாக சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு  உள்ளிட்ட  தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 13 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய  பொருட்களை 6,200 குடும்பத்தினருக்கு  பூம்புகார்  தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ்  வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =