விராலிமலை நலவாரிய பணியாளர்களுக்கு மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது..

கொரோனாவால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, இன்று விராலிமலையில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும், தொழிலாளர் நல வாரியங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பால் வளத்தலைவர் செ.பழனியாண்டி, மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை தலைவர் ரவி, துணைத்தலைவர் தீபன்சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகன்டன், நகர செயலாளர் செந்தில், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − 17 =