திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

தமிழக அரசு சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் ஏற்பாட்டில், தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 21 வார்டுகளில் உள்ள 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. கொரோனா நிவாரணமாக ரூ.65 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்பட 16 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, தமிழக அரசு சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் திரட்டினார்.

அவற்றை அனைத்து வார்டுகளுக்கும் அனுப்பி வைக்கும் நிகழ்வு திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். பொருட்களை, வார்டு வாரியாக பொதுமக்களுக்கு நிர்வாகிகள் விநியோகம் செய்வார்கள். இந்த நிகழ்வில் அதிமுக தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், உஷா ரவிக்குமார், கண்னபிரான், சண்முகம், ஆண்டவர் பழனிசாமி, சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 + = 39