ஓய்வூதியம் வாங்குவோர்க்கு ஓய்வூதியம் குறைப்பு மற்றும் நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏழைகள் , கூலித்தொழிலாளிகள், நடுத்தர குடும்பத்தினர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்து, பல்வேறு துறைகளில் உள்ள மூத்த உயர் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஊதியமும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்குவோரின் ஓய்வூதியம் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் நிறுத்திவைக்கப்படும் என்றும் தகவல் வெளியானதால், ஓய்வூதியதாரர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை. இதுபோன்று பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஓய்வூதியதாரர்கள் நலனில் மத்திய அரசு முழுமையாக அக்கறை கொண்டு செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3