ரமலான் மாத சிறப்பு தொழுகை : வீட்டிலேயே நடத்த இஸ்லாமிய மத குருமார்கள் வேண்டுகோள்

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுநோய் பாதிப்பால்  தங்கள் மத பிரார்த்தனைகளை வீட்டிலேயே நடத்துமாறு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உலமாக்கள் மற்றும் முஃப்திகள் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐதராபாத்தில் ஜாமியா நிஜாமியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோவைரஸ் தொற்றுநோய்  காரணமாக நாடு தழுவிய ஊரடங்கை கருத்தில் கொண்டு, ‘தாரவீஹ் தொழுகைகளை’ வீட்டிலேயே செய்யுமாறு முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், இஸ்லாமியர்களின் சன்னி பிரிவு தலைமை காஜி சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குலாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும் 19 ஆம் தேதிக்குள் 2895 பள்ளி வாசல்களுக்கும் தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் 5450 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் எனவும், அதனை தகுதி வாய்ந்த நபர்களுக்கு பிரித்து தன்னார்வளர்கள் மூலமோ, மாவட்ட நிர்வாகம் மூலமோ பாதுகாப்பான முறையில் 22 ஆம் தேதிக்குள் கொண்டு சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும் நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்திக் கொள்ளவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − = 48