கும்பகோணம் அருகே பொதுவெளியில் கிடா கறி விருந்து : இளைஞர்களை கைது செய்து போலீஸார் நடவடிக்கை

கும்பகோணம் அருகே கிடா வெட்டி பொதுவெளியில் விருந்து வைத்து பேஸ்புக்கில் அதனை நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர்களை கைது செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ளது தியாகசமுத்திரம்.. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவிற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கிடா வெட்டிக் கொண்டாட நினைத்தனர். அதன்படி மற்ற இளைஞர்களுக்கும் தகவல் கூறியதுடன் நேற்று கிராமத்தின் திறந்த வெளிப்பகுதியில் கிடா வெட்டி சமைத்தனர். இதையறிந்த பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

இதையடுத்து தலைவாழை இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீளமாக வைத்து சோறு பரிமாறியிருக்கிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நெருக்கமாக அமர்ந்து விருந்து சாப்பிடத் தொடங்கினர். இதை இளைஞர் ஒருவர், `எங்க ஊரில் கொரோனா கொண்டாட்டம் நடைபெறுகிறது’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் வீடியோவாகவும் நேரலை செய்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கபிஸ்தலம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளதுடன் சிவகுரு என்ற இளைஞரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சக்திவேல்,சங்கர், மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − = 37