புதுக்கோட்டையில் வீடுகளில் இருந்தே மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் : பக்தர்கள் வருகை இல்லாமல் கோயில்கள் வெறிச்சோடின

கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவால்  புதுக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தமிழ் புத்தாண்டை மக்கள் தங்களது வீடுகளில் இருந்தே   கொண்டாடினர்.  பக்தர்கள் செல்லாததால் கோயில்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தமிழ் புத்தாண்டை  தமிழக முழுவதும் உள்ள  கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் வழிபாடு தலங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் நடைகளை திறக்கக் கூடாது என்றும் அரசு   சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த தமிழ் புத்தாண்டை  புதுக்கோட்டை மற்றும் அதன்  சுற்றுவட்டார பொது மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி கடவுளுக்கு படையல்கள் வைத்து இறைவனை வழிபட்டனர். இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும், இந்த தமிழ் புத்தாண்டில் கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி வீடுகளில் இருந்தே வழிபட்டனர்.

புதுக்கோட்டை நகரில்  உள்ள அரியநாச்சி  அம்மன் திருக்கோவிலில்  எளிய முறையில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடும்,உலக நன்மைக்கும்,அனைவரின் நலம் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும்  ஹோமம் நடைபெற்றது.  பின்னர்  அம்மனுக்கு பல்வேறு  அபிஷேகங்கள்  மலர் அலங்காரத்துடன்  நடைபெற்றது.      ஊரடங்கு உத்தரவால் ஒருசில பக்தர்கள் மட்டும்  கோயிலுக்கு வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்   திருக்கோவிலில்  தமிழ் புத்தாண்டு தின வழிபாடு 

அதேபோல் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்  கோயிலிலும்  தமிழ் புத்தாண்டு தின   வழிபாடு ,எளியமுறையில் நடந்தது . புத்தாடை,  மலர் அலங்காரத்துடன் ஸ்ரீ முனீஸ்வரருக்கு   பால்  அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இங்கும் ஒருசில பக்தர்கள் மட்டும் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

படங்கள் : டீலக்ஸ் ஞானசேகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 51