கோவையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று…

மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில், 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி, தூத்துக்குடியில் ஒரு உயிரிழப்பு என பல தகவல்களை தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது கொரோனா பதித்தவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் கோவையில் மட்டும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்,சென்னையில் 172பேர் பாதிக்கப்பட்டும், 4பேர் உயிரிழந்தும் உள்ளனர். கோவையில் மொத்தமாக 86பேரும், ஈரோட்டில் 60பேரும், நெல்லையில் 56பேர், திண்டுக்கல்லில் 54பேர், நாமக்கல்லில் 41 பேர், தேனியில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 40பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 40பேர், திருச்சியில் 36பேர், ராணிப்பேட்டையில் 36பேர், திருப்பூரில் 26பேர், மதுரையில் 25 பேர் பாதிக்கப்பட்டும், ஒருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − = 91