ஆலங்குடியில் தினமும் 150 பேருக்கு மதிய உணவு : 96 வயதிலும் உதவும் உள்ளத்திற்கு குவியும் பாராட்டுகள்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 96 வயது  நிரம்பிய இராமச்சந்திரன் செட்டியார் அங்குள்ள 150 பேருக்கு தனது சொந்த செலவில் தினசரி மதிய உணவு வழங்கி வருகிறார். அவருடைய இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் சேவாபாரதி தொண்டு நிறுவனத்தின் தலைவருமான இராமச்சந்திரன் செட்டியார் இவருக்கு வயது 96.  தன்னுடைய தள்ளாத முதுமையான  வயதிலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு ஆலங்குடியில் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு கடந்த 9   நாட்களாக மதிய உணவு வழங்கி வருகிறார்.

தனது சேவாபாரதி தொண்டு நிறுவனத்தின் சார்பில் தினந்தோறும் தன்னுடைய வீட்டில் சமையல்காரர்கள் வைத்து சமைத்து ஆலங்குடி நகரில்  தங்கி உள்ள   வடமாநில தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு வழங்கி வருகின்றனர். மேலும் ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர்,   என உணவில்லாமல் தவிக்கும் அனைவருக்கும் இவர் தினசரி  மதிய உணவு வழங்கி வருகிறார். ஊரடங்கு முடியும்வரை மதிய உணவு  தொடர்ந்து வழங்கப்போவதாகவும் இராமச்சந்திரன் செட்டியார் தெரிவித்துள்ளார்,

ஆலங்குடி பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் , பேரூராட்சியின் இளநிலை உதவியாளர்கள், சண்முகவள்ளி ரேவதி, வரித்தண்டலர் கேசவன் மற்றும் பேரூராட்சியின் மேற்ப்பார்வையாளர் இராஜேந்திரன், குமார், தூய்மைப்பணியாளார்கள் மற்றும் சேவாபாரதி தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளார் பாலு  ஆகியோர் நேற்று மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டனர்.

தன்னுடைய முதுமையை பொருட்படுத்தாமல் மற்றவர்களின் பசியைப் போக்கி வரும் இராமச்சந்திரன் செட்டியாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 + = 76