புதுக்கோட்டை தற்காலிக உழவர் சந்தை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் : மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டையில் தற்காலிக உழவர் சந்தை புதிய பேருந்துநிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருவதால், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுமை காய்கறிகளை உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் இயங்கி வந்த உழவர் சந்தையினை பிரித்து தற்காலிக உழவர் சந்தையாக அரசு மகளிர் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உழவர் சந்தை கூடுதலாக இயங்கி வந்தது.

விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகள் நிழலில் இல்லாமல் வெயிலில் இருப்பதாலும், விற்பனை செய்வோர் மற்றும் நுகர்வோர் வெயிலில் நின்று வாங்குவதை தவிர்க்கும் பொருட்டும், நிர்வாக காரணங்களாலும் தற்காலிகமாக இயங்கி வந்த உழவர் சந்தை இடம் மாற்றப்பட்டு தற்பொழுது புதிய பேருந்து நிலையத்தில்  நாளை (ஏப்ரல்-7) முதல் செயல்படும்.

எனவே காய்கறி வாங்கும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் அனைவரும் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ள தற்காலிக உழவர் சந்தையினை பயன்படுத்தி பசுமையான காய்கறிகளை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − = 16