திருப்பூரில் 6,45,920 ரேசன் கார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம்: உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். திருப்பூர் மாவட்டத்திற்கு நிவாரணத் தொகையாக 7,25,990 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் 89.9 சதவிகித நபர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 58,248 நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

1,28,665 வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாதவர்கள் இம்மாத இறுதிவரை கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனவும் திருப்பூரில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த மூன்று பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கிருமிநாசினி பாதையினை மத்திய நிதியமைச்சர் பாராட்டியுள்ளார் என அமைச்சர் கூறினார். அனைத்து அத்தியாவசிய பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்க தயாராக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − 65 =