திண்டுக்கல்லில் கொரானா பாதித்த பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு..

கொரோனா பாதிப்பு காரணமாக திண்டுக்கல் பேகம்பூர், பால கிருஷ்ணாபுரம், பூச்சிநாயக்கன்பட்டி, மக்கான்தெரு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவும் வெளியாட்கள் உள்ளே செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் செல்லும் வழிகள் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதா வணிக நிறுவனங்கள் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா சுகாதார பணிகள் முழுமையாக நடைபெறுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =