கோவையில், கொரோனா தொற்றிலிருந்து குணமான 10 மாத குழந்தை…

கோவையில் கொரோனா பாதிப்பில் முதல் நபராக அனுமதிக்கப்பட்ட ஸ்பெயினில் இருந்து வந்த 26 வயது மாணவி, பெண் மருத்துவர், 10 மாத குழந்தை, வீட்டு பணிப்பெண் மற்றும் திருப்பூரை சேர்ந்த 57 வயதுடைய நபர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலயில், குணமடைந்த 5 பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது மேலும், பல்வேறு வகையான பரிசோதனையில் சோதித்துப் பார்த்தபின்பு எந்தவிதமான பாசிட்டிவ் அறிகுறிகள் வராத காரணத்தால் மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் வருகின்ற 28 நாள் அவர்கள் வீட்டிற்குள்ளேயே தனிமைபடுத்தி இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து உடல்நிலையில் பிரச்சினை வந்தால் உடனடியாக மருத்துவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கோவையில் 59 பேர் கொரோனா நோய்தொற்று உடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 300 பேருக்கு கோவையில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 228 பேருக்கு தொற்று இல்லை எனவும் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் இருப்பதற்கே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இஎஸ்ஐ மருத்துவமனை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் 144 தடை உத்தரவை மதித்து நடந்து கொள்ளவும் மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவிற்கு கட்டிடங்களும் வளாகங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வென்டிலேட்டர் தயார் நிலையிலும் கூடுதலாக வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் வந்து சேரும் எனவும் வருகின்ற பத்தாம் தேதிக்கு மேல் முதல்வர் அறிவித்த பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் சுற்றி இரண்டு கிலோ மீட்டருக்கு கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு படியாக அன்னூர், ஆனைமலை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநகர் பகுதிகளில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − 64 =