ஏழை மக்களுக்கு சமையல் பொருள்கள் வழங்கிய தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார்!!

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர்.

144 தடை உத்தரவு நேரத்தில் தேவை இல்லாமல் வெளியே வருவோர்க்கு நூதன முறையில் தோப்பு கரணம் மற்றும் சில உடற்பயிற்சிகள் செய்ய சொல்லி தண்டனை கொடுத்து, கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்கள் ஆலோசனை பெயரில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் சங்கர், காமராஜ் மற்றும் காவல்துறையினர் பல ஏழை, எளிய குடும்பத்தினர் மற்றும் வறுமையில் வாடுவோரை அடையாளம் கண்டு
மகிழ்ச்சிபுரம், கே.வி.கே.நகர், அண்னாநகர் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு 500 கிலோ அரிசி மற்றும் பருப்பு ஆகிய சமையல் பொருட்களை வழங்கினார்கள். காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த இக்கட்டான கால கட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தங்களுக்கு உள்ள பணிசுமைகளை பொருட் படுத்தாமல் மனிதநேயத்தோடு ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை மகத்தானது என அனைத்து தரப்பினராலும் பாராட்டபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

84 + = 88