எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடிபேச்சு : ப.சிதம்பரம் வரவேற்பு

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;-  இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை  செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + = 7