தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேருக்கு கொரோனா பரிசோதனை…

தூத்துக்குடி, காயல்பட்டணத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவியான பெண் டாக்டர், 3 சிறு குழந்தைகள், பெண் டாக்டரின் மாமியார் உட்பட 5 பேர் கடுமையான சளி மற்றும் இருமலுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅவர்களது மாதிரி எடுக்கப்பட்டு நெல்லையிலுள்ள கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சோதனை முடிவுகளுக்கு பிறகே அவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா என தெரியவரும். காயல்பட்டணம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளநிலையில் ஒரு குடும்பமே கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகளை மூட தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசு உத்தரவினை மீறி இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டால், கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 3