பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்: மு.க. ஸ்டாலின்

இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளநிலையில், கொரோனா தடுப்புக்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்புகாக இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து, கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வரும் 8ம்தேதி எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசி மூலம் பேசிய மோடி உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டு கொண்டதையடுத்து, தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 79