பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க உள்ளோம்: திரிணாமுல் காங்கிரஸ்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், வருகிற 8ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் மோடி ஆலோசிக்க உள்ளார்.

இந்நிலையில், மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு தலைவர்கள் சுதீப் பாண்டோபதாய், டெரிக் ஓ பிரையன், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் இதனை உறுதி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூறுகையில், சமூக விலகல் அவசியம் என்பதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டதை இந்த அரசு செய்யவில்லை. இதனால் கடைசி 2 நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் கூறிய கருத்துக்கள் மதிக்கப்பட வில்லை. இதனால் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்துக்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 − = 52