திருப்பூரில் 3பேருக்கு கொரோனா, 50க்கும் மேற்பட் டோருக்கு பரிசோதனை: மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருப்பூரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடிவருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்திய நிலையில் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் கூடாதவாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறையினரை கொண்டு ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், திருப்பூரில் 1114பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 3பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் 50 க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் வர வேண்டியதுள்ளது என கூறினார்.

பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை இருப்பினும் தங்களைத்தாங்களே பாதுகாத்து கொள்ள ஊரடங்கு முடியும் வரை வீட்டில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =