தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு : பீலா ராஜேஷ்

தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 90,824. 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 10,814. இதுவரை 4,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 85. மற்றொருவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டவர். இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பில் தமிழகம் இரண்டாவது நிலையில்தான் உள்ளது.  தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. மாராஷ்டிராவைவிட தமிழகத்தில்தான் பரிசோதனைகள் வேகமாய் நடைபெறுகிறது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 + = 42