டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை பரிசோதனை செய்ய அந்த மத தலைவர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ராம் நகரிலுள்ள இந்து முன்னணியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், நாட்டில் கொரோனா வைரஸ் முதல், இரண்டாம் உலகப்போர் போல் யுத்தமாக மாறியிருப்பதாக தெரிவித்தார். சீனாவில் தொடங்கி அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி தற்போது பாரத நாட்டில் அதிகரித்து வருகிறது.டெல்லி நிஜாமுதீன் மாநாடு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட 2000க்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் குறித்து அதன் தலைவர்களே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு அறிவுரை சொல்லி சிகிச்சை எடுக்க வைக்க வேண்டும் என்றார். 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் டெல்லி சென்று வந்தவர்களில் வியாபாரங்கள் செய்கின்றவர்களால் மற்றவர்களுக்கும் பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறித்து, மதம் சார்பாக அரசு சொல்வது என்பது எந்த மதமாக இருந்தாலும் பொருந்தும் என்றார்.இந்து கோவில்கள், தேவாலயங்களில் மக்கள் கூட்டமாக செல்வதில்லை எனவும், தொழுகைக்காக கூட்டமாக போகின்றவர்களை அந்த மத தலைவர்கள்தான் கண்டிக்க வேண்டும் என்றார்.பாரத பிரதமர் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருப்பதை வரவேற்பதாகவும், வேப்பெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் வழியுருத்தியுள்ளார்.

கொரோனா தொற்று எதிரொலியாக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு சட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.கொரனோ தொற்று காரணமாக , தமிழகம் முழுவதுமுள்ள நலிவடைந்த மக்கள், சென்னையிலுள்ள இந்து முன்னணியின் தலைமை அலுவலக எண் 04428457676 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான, மளிகைபொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்து முன்னணியின் சார்பாக கோவையில் ஏழு இடங்களில் தினமும் 5000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும், இந்து முன்னணி மக்களுக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும், தமிழக அரசு இந்து முன்னணி தொண்டர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். கொரொனா பரிசோதனைக்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அரசு மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். தற்போது டெல்லி சென்று வந்தவர்களால் பயோ ஜிகாத் என சொல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் கட்டுப்பாடோடு இருக்கவும், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 38 = 43