கொரோனா விடுமுறையில் 100 திருக்குறள் : அசத்தும் கறம்பக்குடி அரசுப் பள்ளி மாணவி

கொரோனா விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிட நினைத்த 3 வகுப்பு படிக்கும்  கறம்பக்குடி அரசுப் பள்ளி மாணவி 100 திருக்குறள்களை சரளமாக கூற கற்றுக்கொண்டு அசத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெகப்ரதாயினி. இவரது தந்தை கமலக்கண்ணன். இதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.தற்போது கொரோனா ஊரடங்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் பொழுதை நன்முறையில் செலவிட நினைத்த மாணவி ஜெகப்ரதாயினி, திருக்குறள் படிக்க முடிவு செய்து 100 குறள்களை சரளமாக கூற கற்றுக்கொண்டுள்ளார்.

இதனை வீடியோவாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது தந்தை இது குறித்து தெரிவிக்கையில், ‘முதலில் 100 திருக்குறள்களை முழுமையாக தானே கற்றுக் கொண்டார். இந்த விடுமுறையில் அறத்துப்பால் முழுமையும் படித்து முடிப்பதே இலக்கு. மேன்மேலும் அவள் கற்பதற்கு நாங்கள் உதவுவோம்’ என கூறியுள்ளார். மாணவி ஜெகப்ரதாயினியை அனைவரும் பாரட்டி வாழ்த்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 + = 59