30 நாட்களில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் : கொரோனா யுத்தத்தில் களம் இறங்கிய இந்திய இளம் பொறியாளர்கள்

மகாராஷ்ட்ர மாநிலம் புனே நகரில் சுமார் 8000 சதுர அடி பரப்பளவுள்ள இடமொன்றில் இளம் பொறியியல் வல்லுநர்கள், குறைந்த செலவில் உயிர்காக்கும் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவி) உருவாக்க காலத்தோடு போட்டி போட்டுகொண்டு கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி, மருத்துவமனைகளில் ஏராளமான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் பட்சத்தில் தயராகும் வகையில் இவர்கள் மிக விரைவாக இவற்றை உருவாக்க போராடி வருகிறார்கள்.

இந்தியாவின் மிக சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சிபெற்ற இந்த பொறியியல் வல்லுநர்கள், ரோபாட்கள் தயாரித்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவு செய்த ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் பணியாற்றும் நோக்கா ரோபாட்டிக்ஸ் கடந்த ஆண்டு, 27 லட்சம் ரூபாய் என மிக சாதாரண ஆண்டு வருவாயை மட்டுமே ஈட்டியது. அதேவேளையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே.

இந்தியாவில் தற்போது 48000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ள நிலையில், இதில் எவ்வளவு வென்டிலேட்டர்கள் நல்ல செயல்பாட்டில் உள்ளன என்பது யாருக்கும் சரியாக தெரியாது. இவை அனைத்தும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பயன்பட்டு வருகின்றன என்பது அனுமானம் மட்டுமே.பெங்களுரூவில் உள்ள ஜெயதேவா இதய சிசிச்சை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவரும், இந்த திட்டத்தின் ஆலோசகருமான தீபக் பத்மநாபன் இது குறித்து கூறுகையில், ” இது நிச்சயம் சாத்தியமாக கூடிய ஒன்று. செயற்கை நுரையீரல்களை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நடந்தன” என்று கூறினார்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படக்கூடிய வகையில் குறைந்த செலவில் உருவாக்கப்படும் இந்த வென்டிலேட்டர்களை தயாரிக்க கடும் போராட்டம் நடந்து வருகிறது.

குறைந்த செலவில் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் இந்த திட்டத்தை ஊக்குவித்துவரும் கான்பூர் ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் அமித்தாபா, ”நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் உலகை அச்சுறுத்தி வரும் இந்த தொற்று எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது” என்று கூறினார்.

வென்டிலேட்டர்களை தயாரிப்பது தொடர்பாக ஏராளமான தகவல்களை தேடி பெற்ற இவர்கள், இதற்கு தேவையான அனுமதிகளை வாங்கிய பின்னர் வெறும் எட்டே மணி நேரத்தில் முதல் முன்மாதிரி வென்டிலேட்டரை உருவாக்கினார்கள். பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

மருத்துவ இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் உள்பட சில முக்கிய இந்திய தொழிலதிபர்கள் தங்களின் தொழிற்சாலையை வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணிக்காக தர முன்வந்துள்ளனர்.மே மாதம் மத்திக்குள், நாளொன்றுக்கு 150-200 வரை என்ற கணக்கில் 30,000 வென்டிலேட்டர்களை தயாரிப்பதே திட்டமாகும்.

 இத்தகவலை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − = 27