நாளை காலை மக்களிடம் பிரதமர் மோடி உரை !!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கடந்த மாதம் 20ம் தேதி பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் 25ம் தேதி நாடு முழுக்க முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரமதர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு ,மக்களுக்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சிறு செய்தி சொல்லவிருப்பதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் கொரோனா எந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல் முறை உரையாற்றிய போது ஒரு நாள் மக்கள் ஊரடங்கிற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இரண்டாம் முறை மக்களிடம் உரையாற்றிய போது 21 நாட்கள் சுயமாக ஊரடங்கை பிறப்பித்துக்கொண்டு வீட்டிற்குள்ளயே இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 3வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 77