நடிகர்கள் நிதி வழங்குங்கள்: ஆர்.கே.செல்வமணி

கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 144 தடை இருப்பதோடு, திரைத்துறையும் முடக்கப்பட்டுள்ளது. படபிடிப்புகள் இல்லாததால், சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கி உள்ளதாகவும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25,000 உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு சம்மேளனம் மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்கவும், எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1,59, 64,000யும், அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள். இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, தமிழ் திரைப்பட துறையில் நல்ல நிலைமையில் இருக்கும் நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்பட தொழிலாளர்களை காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 + = 84