டெல்லி விவகாரத்தை மதப்பிரச்னையாக மாற்ற வேண்டாம்: முருகன்

புது டெல்லியில் நிஜாமுதீன் பகுதியிலுள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் மத அமைப்பு சார்பில் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இம்மாநாட்டில், பங்கேற்ற பல மாநிலத்தை சேர்ந்தோர்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வெளியிட்டடுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், புதுடெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து சென்றிருந்த 1000-க்கும் மேற்பட்டோர், தமிழகத்திற்கு திரும்பி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாநாட்டின் மற்றும் பயணத்தின் போது சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது எனவும், சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அரசியல் மதபிரச்னையாக யாரும் மாற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1