கொரோனா தாக்குதல் : உலகம் முழுவதும் பலி 50 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

அதிகபட்சமாக இத்தாலி 13,915, ஸ்பெயின் 10,0003, அமெரிக்கா 5,334, பிரான்ஸில் 4,032 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9,80,519ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 2,06,264க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 + = 78